ADVERTISEMENT

"விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி" - திண்டுக்கல் ஐ லியோனி

07:30 PM Jun 14, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

எஸ்தெல் என்டர்டெய்னர் (Esthell Entertainer) நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அழகிய கண்ணே'. இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளரும் அவரின் சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது, "இந்த மேடை எனக்கு கனவு. சினிமாவில் வருவது எனக்கு மிகப்பெரிய கனவு. அதற்கு எனக்கு சுதந்திரம் அளித்ததற்கு என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன். சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கை பயணம் இருந்தது. எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி. என்னை இந்த கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்த இயக்குநர் விஜயகுமார் அண்ணனுக்கு நன்றி. இந்தப் படத்திற்கு கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. இறுதியில் சஞ்சிதா ஷெட்டி நடிக்க ஒப்புக்கொண்டார். சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார்." என்றார்.

திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது, "கே.எஸ்.ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். என் குடும்பத்தின் சார்பாக நான் அவருக்கு நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தப் படக்குழு அனைவருமே மிக எளிமையானவர்கள். விஜய் சேதுபதிக்கு எனது மிகப்பெரிய நன்றி. நான் கேட்டதும் உடனே சரி என்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான். பல முயற்சிகள் செய்தான். அவன் உழைப்பிற்கு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT