ADVERTISEMENT

அப்பா பாணியில் துருவ் எடுத்த புதிய முயற்சி... குவியும் பாராட்டுக்கள்

06:21 PM Feb 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகான்’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழு, ‘மிஸ்ஸிங் மீ’ என்ற பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க துருவ் விக்ரம் எழுதி பாடியுள்ளார். இதன்மூலம் நடிகர் துருவ் விக்ரம் முதல் முறையாக எழுதி பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை விக்ரமும் நடிப்பைத் தாண்டி பல படங்களில் பாடல்கள் பாடியுள்ள நிலையில் தற்போது நடிகர் துருவ் விக்ரம் எழுதி பாடியிருக்கும் 'மிஸ்ஸிங் மீ' பாடல் பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது. துருவ் விக்ரமின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT