ADVERTISEMENT

உதயநிதி கொடுத்த ரிவியூ - பதிலளித்த தனுஷ்

03:51 PM Jan 13, 2024 | kavidhasan@nak…

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் நேற்று (13.01.2024) வெளியான படம் 'கேப்டன் மில்லர்'. ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதனால் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ந்தார். இந்த நிலையில் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமைச்சர் உதயநிதி. அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி. பிரகாஷ், சத்ய ஜோதி, பிரியங்கா மோகன் மற்றும் சண்டை பயிற்சியாளர் திலீப் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

ADVERTISEMENT

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து தற்போது தனுஷ் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்களுக்கு பிடித்த கலையை, நீங்கள் பாராட்ட தவறியதில்லை. கர்ணன் படத்திற்காக நீங்கள் பாராட்டிய தருணத்தை இன்னும் அன்புடன் நினைவில் கொள்கிறேன். இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT