/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/44_76.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எழுப்பிய சத்தம் மற்றும் புகை மூட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்பு மத்தளம்பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து படக்குழு ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் பழையபடி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜூன் மாதமும் டீசர் வருகிற ஜூலை மாதமும் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)