ADVERTISEMENT

'புஷ்பா' பட இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்?

03:56 PM Jan 24, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்திலும், பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படம், நேரடியாகத் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் பெரும் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ள சுகுமார் இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT