ADVERTISEMENT

கரோனா தொற்று... சிகிச்சையில் பிரபல நடிகையின் குடும்பம்!

11:47 AM May 05, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட தீபிகா படுகோன், உரிய சிகிச்சை எடுத்துவருகிறார். தீபிகாவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜாலா, இளைய சகோதரி அனிஷா ஆகியோர் சமீபத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை எடுத்துவரும் நிலையில், தற்போது தீபிகா படுகோனுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தீபிகா படுகோனின் குடும்பத்தினர் அனைவரும் கரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT