ADVERTISEMENT

தோற்றத்தை மாற்றிய அருள்நிதி!

03:54 PM Jul 21, 2021 | santhosh

ADVERTISEMENT

தயாரிப்பாளர் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சமீபத்தில் அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின் முழு உரிமைகளையும் கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது ​​அருள்நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். எம்என்எம் பிலிம்ஸ் சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கும் இப்படத்தை, பிரபல எரும சானி புகழ் யுடியூபர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது...

ADVERTISEMENT

"திரைத்துறையில் முன்னணி ஆளுமையாக வலம் வரும், இயக்குநர் பாண்டிராஜ் போன்ற ஒருவர், எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவது மிகச் சிறந்த தருணம் ஆகும். தமிழ் திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பு தனித்துவமானது. ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டதில் எங்கள் படக்குழு மிகவும் உற்சாகத்தில் உள்ளது. படத்தினை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்" என்றார். எம்என்எம் பிலிம்ஸ் அரவிந்த் சிங் இப்படம் குறித்துக் கூறும்போது... "பாண்டிராஜ் போன்ற முன்னணி இயக்குநர் எங்கள் "டி பிளாக்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளோம்" என்றார்.

இப்படம் குறித்து இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பேசியபோது... "இத்திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும், நேர்மறையான அதிர்வுகளைப் பெற்று வருவதால் எங்கள் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். பி.சக்திவேலன் அவர்களின் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம், எங்கள் திரைப்படத்தின் முழு உரிமைகளையும் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, ​​இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது பெருமையாக இருக்கிறது. அருள்நிதியுடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அருள்நிதி தனது பாத்திரத்திற்காக மிகக்கடினமான முயற்சிகளை மேற்கொண்டார். இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் நடிப்பதால், அவர் ஏழு கிலோவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார்" என்றார். அவந்திகா மிஸ்ரா (Shades of Kadhal music album புகழ்) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT