ADVERTISEMENT

கேப்டன் மில்லர் பட கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்

05:16 PM Jan 09, 2024 | kavidhasan@nak…

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவுற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக முன்பு படக்குழு தெரிவித்த நிலையில், பின்பு 2024 ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ‘கில்லர் கில்லர்...’,‘உன் ஒளியிலே...’,‘கோரனாரு...’ போன்ற பாடல்களின் லிரிக் வீடியோ வெளியானது. பின்பு யு/ஏ சான்றிதழுடன் ஜனவரி 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என ரிலீஸ் தேதியுடன் கூடிய புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்க கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக கேப்டன் மில்லர் படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT