/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/246_10.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் பல சிக்கல்களைப் படக்குழு எதிர்கொண்டு இப்போது முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் டீசர் வருகிற 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகிறது. மேலும் இந்தாண்டுக்குள் இப்படம் திரைக்கு வந்துவிடும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் டீசர் 28 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் எனதற்போது படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷின் முகம் தெளிவாகத்தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புது போஸ்டரில் முகத்தில் ரத்தக் கரையுடன் ஆக்ரோஷமாகத்துப்பாக்கி ஏந்திச் சுடுவது போல் அமைந்துள்ளது. இதனால் டீசருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தாண்டுக்குள் இப்படம் திரைக்கு வந்துவிடும் எனபடக்குழு முன்பு கூறியதைத்தொடர்ந்து டீசரில் ரிலீஸ் தேதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The #CaptainMillerTeaser Rage begins at 12:01AM , JULY 28th ??
THE D DAY #CaptainMiller ?@dhanushkraja@ArunMatheswaran@NimmaShivanna@sundeepkishan@gvprakash@priyankaamohan@saregamasouthpic.twitter.com/MAncriQDvh
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 26, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)