ADVERTISEMENT

யுவனுடன் இணைந்த புகழ்; காமெடியன் டூ ஹீரோ... குவியும் வாழ்த்துக்கள்!

05:13 PM Mar 21, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான புகழ், அஜித்தின் 'வலிமை', அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'யானை','ஏஜென்ட் கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். என்னவளே, ஜூனியர் சீனியர் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் இயக்கும் 'மிஸ்டர். ஜு கீப்பர்' என்ற படத்தில் புகழ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஷெரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ள புகழுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT