actress pranitha welcome baby girl

Advertisment

தமிழில் ‘உதயன்’, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர்தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரைகடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த ப்ரணிதா சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகை ப்ரணிதாவுக்குஅழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தைதனது சமூக வலைதளத்தில்பகிர்ந்த அவர், என் பிரசவத்தை எளிமையாகியமருத்துவர்களுக்கு நன்றி. இந்த செய்தியை உங்களுடன்பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.