ADVERTISEMENT

“இறுதிக்கட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளன”- 'டெனட்' குறித்து கிறிஸ்டோஃபர் நோலன்!

11:05 AM Jun 03, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்தப் படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT


அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. இந்தப் படத்தின் கரு டைம் ட்ராவல் இல்லாமல் ஆனால், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியேரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் புது சினிமாக்கள் திரையிடப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த மூன்று மாதங்களில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட திரைப்படங்களில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளன. ஆனால், டெனட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாமலே இருந்தது. இதனால் படம் ஜூலை மாதத்தில் முன்பு அறிவிக்கப்பட்ட அதே ரிலீஸ் தேதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் கண்டிப்பாக திரையரங்கில்தான் வெளியிடப்படும் என்பதை ட்ரைலரில் உறுதி செய்துள்ளது படக்குழு.


அமெரிக்க வார இதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்டோஃபர் நோலன், “‘டெனெட்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. திரையரங்குகள் திறக்கப்படும் வேளையில் படம் வெளியாகும். இப்போதைக்கு என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும்'' என்று கூறியுள்ளார்.

முன்னதாக உலகம் முழுவதும் 80 சதவீத திரையரங்குகள் திறக்கப்பட்டால் மட்டுமே படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT