ADVERTISEMENT

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை ... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

12:56 PM Feb 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஃகோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி அளித்த தீர்ப்பால் தான் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், என்னிடம் காப்புரிமை பெறாமல் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தி வருகிறார்கள். இப்பாடலை படத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், இதர இணையதளங்களில், பயன்படுத்துவது தவறு என்றும், இது எனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதி இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் எஃகோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT