கரோனா முடியும் வரை காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகள் மீதான விசாரணையை நடத்த வேண்டும் என்று பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

கரோனா தொற்று பரவல் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை, தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்

.

chennai high court chief judge bar council

இது தொடர்பாக சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘நீதிமன்றங்களுக்கு மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை தள்ளி வைக்கப்பட்டது, பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக, பாதுகாப்பான முறையில் நீதிமன்றத்தை நடத்த போதிய வசதிகள் இல்லாத கீழமை நீதிமன்றங்களில் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழகம் மற்றும் புதுவை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

chennai high court chief judge bar council

வழக்கமாக ஆண்டு தோறும் மே 1- ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவித்திருந்தார். அவர் தனது அறிவிப்பில் மே 2 முதல் 31- ஆம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாகக் கூறியிருந்தார். இதனால்தான், அமல்ராஜ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.