ADVERTISEMENT

ஷாரூக்கான் படத்தின் உரிமையை வாங்கிதான் பிகில் எடுக்கப்பட்டதா? பதிலளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா

12:50 PM Oct 16, 2019 | santhoshkumar

தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது. இரண்டு மில்லியன் லைக்ஸை பெற நெருங்கி வருகிறது. மேலும் 26 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் கண்டு கழித்துள்ளனர்.

தற்போது இந்த படம் u/a சான்றிதழை தணிக்கை குழுவிடம் இருந்து பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 2 மணிநேரம் 59 நிமிடம் இந்த படத்தின் நீளம் என்றும் இதன் மூலம் தெரியவருகிறது.

இந்த படத்தின் போஸ்டர் வெளியான சமயத்தில் இருந்து இது சக்தே இந்தியா படத்தின் காப்பியாகதான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். ட்ரைலரில் இன்னும் சத்தமா என்கிற காட்சியை பார்த்து சிலர் இது சக்தே இந்தியாதான் என்று முடிவே செய்துவிட்டார்கள். ஆனால், இதற்கும் சக்தே இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று படக்குழு முன்னமே தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளரிடம் “நீங்கள் சக்தே இந்தியா படத்தின் உரிமையை வாங்கிவிட்டுதான் பிகில் படத்தை எடுப்பதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறதே” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “இல்லை, அதெல்லாம் அது ஒரு வதந்தி” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT