விஜய் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவை தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.

Advertisment

bigil

விஜய்யை வைத்து அடுத்து படம் இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜும் இவ்விழாவில் கலந்துகொண்டார். மேடை ஏறிய பிரபலங்கள் அனைவரும் நடிகர் விஜய்யை குறித்தும், அவர் செட்டில் எப்படி நடந்துகொள்வார் என்பதையும் சிலிர்த்து பேசி சென்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியும் நடைபெற்றது. விஜய்யும் தான் பேச ஆரம்பிக்கும் முன்பாக வெறித்தனம் பாடலை பாடி ஜாலியாக துவங்கினார். அப்போது விழாவை தொகுத்து வழங்கியவர் விஜய்யிடம், உங்களுடைய படம் வெளியாகும் சமயத்தில் சில சங்கடமான விஷயங்கள் சிலரால் போஸ்டர், பேனர் கிழிக்கிறார்களே அதை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்றார்.

Advertisment

alt="super duper" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c45f3cc5-824c-4947-b81c-0e3c2fc26eea" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/super%20duper_17.png" />

அதற்கு பதிலளித்த விஜய், “பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன். என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க. என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வைக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க....” என்று கூறிவிட்டு சிரித்தார்.