Skip to main content

பிக்பாஸ் முகினின் தந்தை காலமானார்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

பிரபல டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் தமிழின் 3ஆவது சீஸன் பங்குபெற்று வெற்றியடைந்தார் மலேசிய தமிழர் முகின் ராவ். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு யு-ட்யூபில் பாடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.
 

mugen

 

 

இந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீஸன் 3-ல் முகின் ராவுடன் சக போட்டியாளராக கலந்துகொண்ட அபிராமி தனது ட்விட்டரில், “உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் பிரகாஷ் ராவ். தைரியமாக இரு” என்று முகினுக்கு ஆறுதலாக பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் இணைந்த 'வேலன்' பட கூட்டணி

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

mugen rao next movie update

 

மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் ராவ், அங்கு சுயாதீன இசைக்கலைஞராக இருந்து, அதன் மூலம் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் பிரபலமானார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'வேலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் வெற்றி, மதில் மேல் காதல் என சில படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. 

 

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது முறையாக மீண்டும் 'வேலன்' பட இயக்குநரான கவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜி.மணிக்கண்ணன் தயாரிக்க இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது. 

 

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'டாடா' பட இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

வளர்ந்து வரும் நடிகர்களுடன்  கைகோர்த்த இயக்குநர் ராஜேஷ் 

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

shanthanu and mugen joins diretor rajesh web series

 

தமிழ் சினிமாவில் காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ராஜேஷ் 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'வணக்கம் டா மாப்ள' உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே இயக்குநர் ராஜேஷ் நடிகர் சாந்தனு மற்றும் முகென் ராவ் நடிக்கும் இணைய தொடரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி மற்றும் ஜனனி ஐயர் நடிக்க, சக்தி பஞ்சு சுப்பு, லக்கி நாராயணன், அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் பணிகள் தொங்கி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.