ADVERTISEMENT

லதா ரஜினிகாந்த் தொடர்பான வழக்கு; உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு 

01:04 PM Aug 11, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். அனிமேஷனில் எடுக்கப்பட்ட இப்படத்திற்காக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்ததனால் அந்நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8½ கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை பணம் வராததால் கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக ஆட்புரு அண்ட் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை தொடர்ந்து ஏமாற்றுதல், தவறான தகவல்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பதியப்பட்டு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 3 பிரிவுகளை ரத்து செய்த நிலையில் ஆவணங்களைத் திரித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து கீழ் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் கடன் பெற்றது தொடர்பான வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால், இவ்வழக்கு விசாரணையிலிருந்து லதா ரஜினிகாந்த்துக்கு விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT