latha rajinikanth about rajini political entry

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் 'கோச்சடையான்'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் 'மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்' நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார். பின்பு முரளி கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தராததால், முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பெங்களூரு நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார்.

Advertisment

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரனார் லதா ரஜினிகந்த். அவருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்வழங்கி ஜனவரி 6ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கபட்டது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் லதா ரஜினிகாந்த்.

Advertisment

அவர் பேசுகையில், “ஜெயகுமாரும், முரளியும் கோச்சடையான் பட தயாரிப்பாளராக இருந்தனர். அவர்கள் பைனான்ஸ் வாங்குவதற்கு நான் உத்தரவாத கையொப்பம் போட்டேன். பின்பு அதை செட்டில் செய்து விட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பிரபலமாக இருப்பதால் ஏதோ ஒரு வன்மம், அவமரியாதை செய்து கொண்டு வந்தார்கள். இறுதியாக உச்ச நீதிமன்றம் என்னை ஆஜராக வேண்டாம் என சொன்னதனால் கர்நாடகாவிற்கு வழக்கு வந்தது. நீதிமன்றத்திற்கு மதிப்பு கொடுத்து நேரில் ஆஜரானேன். நியாத்திற்கு போரடலாம். அநியாத்திற்கு துணை போக முடியாது. ரஜினிக்கு நியாயம் எது என்று தெரியும். அவர் ரொம்ப சப்போர்ட் பன்னார். ” என்றார்.

நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “சட்டம் ரொம்ப கஷ்டமானதாக இருக்கிறது. சட்டம் இருக்குறதா என்றே தெரியவில்லை. மக்களுக்குநியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை. 10 வருஷமாக இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள், இது தான் சட்டம். எதுவும் பண்ணமுடியாது என்கிறார்கள்” என்றார்.

Advertisment

ரஜினி அரசியலுக்கு வராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ரொம்ப வருத்தம். ஏனென்றால் நான் அவரை தலைவராகத் தான் பார்த்தேன். சிறந்த தலைவர் அவர். ஆனால் அவர் வராததற்கு நியாமான காரணம் இருந்தது. அதை மதிக்க வேண்டும். இப்பவும் தமிழ்நாட்டிற்கு அவர் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்” என்றார்.