ADVERTISEMENT

காதலை முன்னிலைப்படுதும் 'பனாரஸ்' - ரிலீஸ் தேதி அறிவிப்பு 

05:40 PM Sep 03, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குநர் ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இப்படத்தில் கதாநாயகனாக அறிமுக நடிகர் ஜையீத் கான் நடிக்க, பாலிவுட் நடிகை சோனல் மோன்டோரியோ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் தேவராஜ், அச்சு குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

காதலை முன்னிலைப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை என்.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT