naayaadi movie release update

ஆதர்ஷ் மதிகாந்தம்என்பவர் தயாரித்து இயக்கியும் உள்ள படம் 'நாயாடி'. இப்படத்தில் கதாநாயகியாக காதம்பரி நடிக்க அருண் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து ஆதர்ஷ் கூறுகையில், "திரில்லர் வகையில் இந்தப் படத்தை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தப் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி 16 விருதுகளையும் வென்றுள்ளோம். இதுவே எங்களுடைய முதல் வெற்றி. நாயாடி மக்கள் மனிதர்களால் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

Advertisment

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அரசர்களுக்கு சேவகம் செய்யும் அடிமை வம்சங்கள் இருந்தன. அந்த சேவகம் செய்வதற்கு கூட நாயாடி மக்களை அவர்கள் பயன்படுத்தவில்லை. அந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களாக இவர்கள் இருந்து வந்துள்ளனர். ஹாரர் வகையில் இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும்" என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 16 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Advertisment