ADVERTISEMENT

'அந்த படத்திற்கு விருது கொடுக்கணும்' - பாக்யராஜ் புகழாரம் 

12:40 PM Aug 14, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் ஜி.வி.கே இணைந்து தயாரித்துள்ள படம் 'திசை'. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பி.வரதராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப்பாளர் பவன் நடிக்க, நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதாநாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து இயக்குனர் வரதராஜன் பேசியபோது... "இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் மக்கள் இன்று, சற்றே விலை அதிகம் என்றாலும் கூட இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுப்பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனாலேயே அவற்றின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதை பயன்படுத்தி ஆர்கானிக் உணவுப்பொருட்கள் என்கிற பெயரில் மிகப்பெரிய ஊழல் நடந்து வருகின்றது. அதுபற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளோம்.

உதாரணத்திற்கு சொல்லப்போனால் நாட்டு வைத்தியம் என்கிற பெயரில் ஆர்கானிக் முறையில் கேன்சரை குணமாக்குகிறேன், சர்க்கரை நோயை இல்லாமல் செய்கிறேன் என சிலர் பணம் பறிக்கும் வேலையை செய்து வருகின்றனர். இப்போது வருகிற ஆர்கானிக் உணவுப்பொருட்கள் சரியானது தானா என்பதையம் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டாம் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறோம். எனது குருநாதர்கள் காமெடி,ஆக்சன் ரூட்டில் பயணித்தாலும் அதிலேயே தொடர்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாக்யராஜ் இதுபோன்ற படங்களுக்குத்தான் விருதுகள் கொடுக்கப்படனும்னு எங்களை பாராட்டியது மறக்க முடியாதது" என்றார்.சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட்டார். இப்போது இயக்குனர் கரு.பழனியப்பன் இன்னொரு பாடலை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT