ADVERTISEMENT

"அட்லீயின் மேனேஜர் என்னிடம் பேசினார்..." - தளபதி 63 கதை புகார் தெரிவித்த கே.பி.செல்வா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி 

06:26 PM Apr 16, 2019 | santhoshkumar

சர்கார்... விஜயின் இந்தப் படம் ரிலீசுக்குப் பின்பு ஏற்படுத்திய சலசலப்புக்கு இணையாக ரிலீசுக்கு முன்பும் ஏற்படுத்தியது, 'கதைத்திருட்டு' என்ற குற்றச்சாட்டில் சிக்கி. சர்கார் தனது கதை என்றும் 'செங்கோல்' என்ற பெயரில் தான் ஒரு திரைக்கதையை உருவாக்கியதாகவும் அதுதான் இப்போது சர்கார் படமாகியிருப்பதாகவும் வருண் ராஜேந்தரின் என்பவர் குற்றம் சாட்டி, அது நீதிமன்றம் வரை சென்று இறுதியில், சர்கார் படத்தின் டைட்டிலில் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் முருகதாஸ். பணமும் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு விஜய் - முருகதாஸ் இணைந்த கத்தி படத்திலும் இந்தப் பிரச்சனை எழுந்தது. இப்போது விஜய் - அட்லீ இணையும் தளபதி 63 (இன்னும் பெயரிடப்படவில்லை) படத்தின் கதை தன்னுடையது என்று திரைத்துறையை சேர்ந்த ஒருவர் குற்றம் சாட்டி வழக்கும் தொடுத்திருக்கிறார். விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் நம்மிடம் அவர் பேசினார்.

ADVERTISEMENT


"நான் கே.பி. செல்வா, றெக்க படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தேன். இப்போது வேறு ஒரு படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இடைப்பட்ட இந்த இரண்டு வருடங்களில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட ஒரு கதையை உருவாக்கி திரைக்கதை அமைத்தேன். அந்தக் கதையை சில தயாரிப்பு நிறுவனங்களிடமும் சொல்லி வந்த நிலையில்தான் விஜய் சார் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் கதையும் பெண்கள் கால்பந்தை மையப்படுத்தியது என்று சிலர் தெரிவித்தார்கள். என்னுடைய நண்பர்கள் வட்டாரமும் உன்னுடைய கதையை போலவே இந்தப் படத்தின் கதை இருக்கிறது. அதனால் இதை சாதாரணமாக நினைத்து, விட்டுவிடாதே என்றார்கள். இது ஒரு தற்செயலான விஷயம் போலத் தெரியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால் நான் அட்லீக்கும் எனக்கும் தெரிந்த நண்பர்களிடம் இந்தப் படக் கதையை பற்றி விசாரித்தேன்.

ADVERTISEMENT

அப்போது அவர்கள் “அப்படி எல்லாம் இருக்காது. ஒருவேளை அந்தக் கதையாக இருந்தாலும் உன்னை போல ரியாலிட்டியாக செய்ய முடியாது. அவர் வேறு மாதிரி பிரமாண்டமாக செய்வார். அதனால் அதற்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. நீ உன் கதையை வைத்து வேலை பார்” என்றார்கள். பின்னர், எனக்கு அந்தக் கதை மேல் எனக்கு சற்று சந்தேகம் வர தொடங்கியது. இன்னும் கதையை பற்றி விசாரித்தபோது, என்னுடைய கதையிலிருந்து 75 சதவீதம் ஒத்துப்போகிறது என்று தெரிந்த நண்பர்கள் தெரிவித்தனர். இது சம்மந்தமாக அட்லீ குழுவிடம் பேசி என்னதான் நடக்கிறது என்று தெரிந்துகொள்ள நினைத்தேன். ஆனால், அவர்கள் என்னை சந்திக்க மறுத்துவிட்டனர். இதற்கு ஒரு முடிவு தெரியாமல் என்னால் இந்தக் கதையை வைத்துகொண்டு தயாரிப்பு நிறுவனங்களை அணுக முடியவில்லை. அட்லீ தரப்பிலிருந்து இதுகுறித்து அட்லீ மேனேஜர் என்னிடம், “இந்தக் கதையை நீங்கள் ட்ராப் செய்துவிடுங்கள். நாங்கள் மிக பிரமாண்டமாக இந்த படத்தை எடுக்கிறோம்” என்றார். அவர்களுக்கு அந்த உரிமை இல்லை. இதனால் அவர்கள் மேல் எனக்கு சந்தேகம் அதிகமாகியது. மேலும் ‘இதை ட்ராப் செய்யுங்கள், வேறு ஃபேவர் செய்கிறோம்’என்றார்.


நீங்கள் இந்த கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறீரகளா?

இந்த கதையை நான் பதிவு செய்திருக்கிறேன். ஆனால், இந்த கதையை நான் தொடங்கியது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு. பல முறை மாற்றி மாற்றி எழுதியதால், இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் திரைக்கதையை பதிவு செய்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். இந்த கதை கருவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிவிட்டேன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எழுத்தாளர் சங்கத்தில் நான் உறுப்பினராகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது. என்னுடைய புகாரை எடுத்து விசாரித்த சங்கம், பின்னர் இரு தரப்பையும் விசாரித்துவிட்டு இந்த புகாரை நாங்கள் எடுத்துக்கவில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இந்த கதை எப்படி அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அட்லீக்கும் எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்கு நம்பிக்கையானவர்களிடம் என்னுடைய கதையின் சாஃப்ட் காபி முதல் கொடுத்திருக்கிறேன். யாரை கேட்டாலும் நான் இல்லை என்றே சொல்கிறார்கள். இதனால் நான் எல்லாரிடமும் பேசுவதை தவிர்த்துவிட்டேன். என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், எனக்குதான் சப்போர்ட் செய்கிறார்களா? அல்லது அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறார்களா? என்று தெரியவில்லை.


அட்லீயின் மேனேஜர் மட்டும்தான் உங்களிடம் பேசுகிறாரா?

இப்போது இல்லை. இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் சார்கார் படம் ரிலீஸாக இருந்த சமயத்தில் நடந்தது. தளபதி 63 முன் தயாரிப்பில் இருந்த சமயத்திலேயே இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

படத்திற்கு பெயர் கூட சூட்டப்படாத நிலையில் இப்போது வழக்குத் தொடர என்ன காரணம்?

நீதிமன்றத்தை அணுகினால் கண்டிப்பாக அவர் வந்து பேசிதானே ஆக வேண்டும். எப்படி கதையை தொடங்கினீர்கள் என்று பல கேள்விகள் எழுப்பப்படும், அனைத்திற்கும் பதில் சொல்லிதானே ஆக வேண்டும். அங்கு ஆதாரத்துடன் சொன்னால்தான் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்வார்கள். இதனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் ஏறாலம். என்னால் அட்லீ சாரையும் மீட் செய்யமுடியவில்லை. விஜய் சாரையும் மீட் செய்ய முடியவில்லை. ஆனால், ட்ரை பண்ணினேன் முடியவில்லை. அட்லீ சார் அலுவலகம் கீழ் சென்று மீட செய்ய வேண்டும் என்று சொல்வேன். உள்ளே இருந்துகொண்டே இல்லை என சொல்வார்கள்.

இது குறித்து தளபதி 63 தயாரிப்பு நிறுவனத்தில் புகார் தெரிவித்திருக்கிறீர்களா? இதுகுறித்து என்னமாதிரி வழக்கு தொடர்ந்திருக்கிறீர்கள்?

தளபதி 63 எக்சிக்யூடிவ் புரொட்யூசரும் அந்த பேச்சுவார்த்தையின்போது உடன் இருந்தார். வழக்கு தொடர்ந்ததற்கு முதல் காரணம் அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பதற்குதான். இது என்னுடைய உழைப்பு, அப்படியாக அசால்ட்டாக எனக்கு வந்த யோசனை உனக்கு வரும் என்று கடந்துவிட முடியாது. அதை யோசிப்பதற்காக நான் உழைத்திருக்கிறேன். ஆகையால் அதற்கான கிரெடிட் எனக்கு வந்தே ஆக வேண்டும். இவர்களால், என்னுடைய கதையை நான் வேறு யாரிடமும் சொல்லக்கூட முடியவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT