ADVERTISEMENT

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் அசுரன் தெலுங்கு ரீமேக்!

05:29 PM Jun 28, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. தமிழில் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்தனர். தமிழில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்க, மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்தார். இப்படத்திற்கு 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டது.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாரான வேளையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், 'நாராப்பா' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT