actor naresh actress pavithra issue

பிரபல கன்னட நடிகையான பவித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'அயோக்யா', 'க/பெ ரணசிங்கம்', 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தற்போது மகேஷ் பாபுவின் சகோதரரும்நடிகருமான நரேஷைகாதலித்து வந்தார்.

Advertisment

நடிகர் நரேஷ், இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று தற்போது மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்கு முன்பு நரேஷும் பவித்ராவும் பெங்களூருவில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தபோதுநரேஷின் 3வது மனைவி ரம்யாஅவர்களை அடிக்கப் பாய்ந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதையடுத்து கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று நடிகர்நரேஷும்நடிகை பவித்ராவும் திருமணம் செய்துகொள்ளபோவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ மீண்டும் பேசும் பொருளாக மாற நரேஷின்முன்றாவதுமனைவி ரம்யா, எங்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று நிலையில் எப்படி அவர் நான்காவது திருமணம் செய்து கொள்ள முடியும்என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் நரேஷ் குடும்ப நல நீதிமன்றத்தில்உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பாதுகாப்பு வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் கொடுத்த மனுவில், "எனக்கும் எனது மூன்றாவது மனைவி ரம்யாவுக்கு, 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆரம்பத்திலிருந்தே இருவருக்கும் ஒத்துவரவில்லை. பின்பு விவாகரத்து எடுக்க முடிவேசெய்து அவரிடம் விவாகரத்து கேட்டேன். விவாகரத்து கொடுக்கபணம் கேட்டார். அந்தபணத்தை கேட்டு மிரட்டவும்செய்தார். பணம் மற்றும் சொத்துக்காக ரம்யா என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். எனவே என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.