ADVERTISEMENT

அருண் விஜய்யின் பொங்கல் ட்ரீட்... குஷியில் ரசிகர்கள்!

06:05 PM Jan 11, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் யானை படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்கள் இருவரும் மாஃபியா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிரகாஷ் ராஜ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இயக்குநர் ஹரிக்கே உரித்தான கிராமத்துக் கதையை மையமாக கொண்டு ஆக்சன் படமாக இப்படம் எடுக்கப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி யானை படத்தின் முதல் பாடல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT