ADVERTISEMENT

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அர்ஜுன் தாஸ்

05:05 PM Jul 01, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அர்ஜுன் தாஸ், அடுத்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT