/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_56.jpg)
மௌனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கியுள்ள அடுத்த படம் ரசவாதி. இப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்க ஹீரோயினாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், சுஜித் சங்கர், ஜி.எம்.சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சாந்தகுமாரே இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ், அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/51_57.jpg)
ட்ரைலரில், சாந்தகுமாரின் முந்தைய படங்களை போலவே வசனங்கள் அளவாகவும் அழுத்தமாகவும் இடம்பெறுகிறது. ட்ரைலரில்ன் ஆரம்பத்தில், “என்ன பெரியவரே, எத்தனை தலைமைறையா இங்க நின்னு எங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துட்டி இருக்கீங்க” என்ற வசனத்துடன் தொடங்கி, பின்பு வசனங்கள் எதும் இடம்பெறாமல் ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் காதல் காட்சிகள் நிறைந்து இறுதியில், “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு உங்க வீட்ல சொல்லிக் கொடுத்துருக்காங்களா, என் வீட்ல சண்டையில சாவுறதுதான் வீரம்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க” என அர்ஜுன் தாஸ் பேசும் வசனத்துடன் முடிகிறது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)