ADVERTISEMENT

"காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" - பரிதாபம் காட்டும் ஏ.ஆர் ரஹ்மான்

05:27 PM May 06, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'சாட் ஜிபிடி ஏஐ', அமெரிக்காவின் ஓப்பன் ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவி. இதன் மூலம் தேவைப்படுகிற பல்வேறு தகல்வளை நாம் பெற்றுக் கொள்ளலாம். இந்த கருவியை சீனாவில் உள்ள ஒரு பள்ளியில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஒரு வீடியோ கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த ஏஐ கருவியை மாணவர்களின் தலையில் மாட்டியிருக்கிறார்கள். இதனால் மாணவர்களின் செயல் திறன், சிந்தனை, பாடத்தை கவனிக்கிறார்களா...என அனைத்து விஷயங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்கிறார்கள். மேலும் பெற்றோர்களும் இந்த கருவியின் மூலம் பள்ளியில் தங்களது குழந்தைகளின் செயல்களை பெற்றோரால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த கருவி குறித்து நேர்மறையான கருத்துக்களும் எதிர்மறையான கருத்துக்களும் உண்டு.

இந்த வைரல் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "இளம் தலைமுறையினரைப் பார்க்கையில் பரிதாபமாக உள்ளது. அவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT