ar rahman clarifies dhuruv vikram movie rumours

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இதுபோக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisment

இதனிடையே துருவ் விக்ரம் நடிப்பில்'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ஒரு படம் உருவாகுவதாகவும், அதற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமீப காலமாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த தகவலுக்குஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த தகவல் தொடர்பான ஒரு செய்தியை ஒரு ரசிகர் பகிர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கு காத்திருப்பதாக கமெண்ட் செய்திருந்தார். அந்தப் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான், "இந்தத்தகவலில் உண்மை இல்லை. தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். திறமையான, வசீகரமான துருவ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவும் அற்புதமான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

முதலில் துருவ் என்ற வார்த்தைக்கு (Druv) என பதிவிட்ட நிலையில் அந்தப் பதிவை நீக்கி விட்டு, அந்த வார்த்தையை சரி செய்து (Dhruv) என்று திரும்ப பதிவிட்டார். மேலும் வசீகரமான (charming) என்ற வார்த்தையையும் சேர்த்துள்ளார்.