ADVERTISEMENT

"என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்" - ஏ.ஆர் ரஹ்மான் வேண்டுகோள்!

09:45 AM Aug 15, 2020 | santhosh

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்தது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நேற்று இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"இந்த சாதனையாளருக்காக என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து இசை ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன். #எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் தனது அற்புதமான குரலால் நமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளார்!" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT