ADVERTISEMENT

மீண்டும் மோதும் ரஜினி, அஜித்!

11:05 AM Sep 09, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தை தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு கொண்டுவரும் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.

மற்றொருபுறம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ‘வலிமை’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரும் யோசனையில் போனி கபூர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுவரை ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தீபாவளி தினத்தைக் குறிவைத்தே இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு வேகம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ மற்றும் அஜித் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT