Skip to main content

வியாழக்கிழமை செண்டிமென்டை மீண்டும் கையில் எடுக்கும் அஜித் படக்குழு!

 

valimai

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் - அஜித் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. 

 

இப்படத்தின் டீசர் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இந்த வாரத்திற்குள் ‘வலிமை’ படத்தின் டீசர் வெளியாகிவிடும் என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக ‘வலிமை’ டீசருக்கு பதிலாக படத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய காட்சிகளின் சிறு தொகுப்பை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாக உள்ளதால், பட வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. முக்கிய காட்சிகளின் சிறு தொகுப்பானது நாளைய தினம் வெளியாகிறது.

 

சமீபகாலமாக அஜித் படம் தொடர்பான முக்கிய அப்டேட்கள் மற்றும் பட வெளியீடு யாவும் வியாழக்கிழமைகளில் வெளியிடப்பட்டுவந்த நிலையில், அதே செண்டிமெண்டை படக்குழு மீண்டும் கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்