ADVERTISEMENT

அண்ணாத்த படத்தின் ட்ரைலர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

06:48 PM Oct 26, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, படத்தின் மொத்த பணிகளையும் நிறைவுசெய்துள்ளது. இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

திரையரங்க வெளியீட்டிற்கு பத்து நாட்களுக்கும் குறைவான நாட்களே இன்னும் இருப்பதால், படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த ட்ரைலர் வெளியாகிறது.

முன்னதாக, கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்ட அண்ணாத்த டீசர் யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT