ADVERTISEMENT

வெப் தொடரில் நடிக்கும் அஞ்சலி

12:24 PM Dec 28, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே நடிகை அஞ்சலி இயக்குநர் திரு இயக்கும் ஜான்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இயக்குநர் திரு இயக்கத்தில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் ஜான்சி வெப் தொடரை இயக்கியுள்ளார். முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா, சம்யுக்தா ஹோமத் உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஜான்சி வெப் தொடர் பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டைமென்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT