ADVERTISEMENT

'வலிமை' கூட்டணியுடன் இணையும் அனிருத் ?

06:00 PM Nov 27, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் 'வலிமை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இதனைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை எச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT