ADVERTISEMENT

'அவனும் நானும்' - திருமணத்திற்கு ரெடியான அமலா பால்

01:08 PM Oct 26, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், கடைசியாக 'கடாவர்' படத்தில் நடித்திருந்தார். முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் பெரிதளவு பேசப்படவில்லை. இப்போது மலையாளத்தில் பிரித்விராஜின் 'ஆடுஜீவிதம்' மற்றும் இன்னும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அமலாபால், அவரது நண்பர் ஜனா தேசாய், ப்ரொபோஸுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அமலா பாலின் நண்பர் ஜகத் தேசாய், அமலா பாலுக்கு ப்ரொபோஸ் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்ட அமலாபால் அவருடன் இணைந்து நடனமாடுகிறார். இதன் மூலம் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் பலரும் அமலா பாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT