/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/19_37.jpg)
அமலா பால், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் 'அமலா பால் புரொடக்ஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக 'கேடவர்' படத்தை தயாரித்து அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனூப் எஸ் பணிக்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'கேடவர்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை அமலா பால் உள்ளிட படக்குழுவினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)