ADVERTISEMENT

"நீ, நீயா இருன்னு விஜய் சொன்னார்" -  அமலா பால் சொன்ன ஃபிளாஷ்பேக் 

08:12 PM Jul 06, 2019 | vasanthbalakrishnan

'ஆடை'... அமலா பால் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெயிலர் என ஒவ்வொன்றுமே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. படத்தில் அமலா பால், கதைக்கு மிக மிக தேவையென்பதால் நிர்வாணமாக நடித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. பார்ப்பவர்களை அதிர வைக்கும் கதையமைப்பை கொண்ட படம் என்பது டீசர், ட்ரெயிலரில் தெரிகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமலா பால், பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

ADVERTISEMENT



"ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று தோன்றியது. என் மேனேஜரிடம் கூட நான் சொன்னேன். அந்த அளவுக்கு, வந்த கதைகள் எல்லாம் பொய்யான, டிராமாவான கதைகளாக இருந்தன. 'ஆடை' கதைசுருக்கத்தை படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன். இது ஹிந்தி படத்துக்கா, இல்லை இங்கிலிஷ் படத்துக்கா என்று என் மேனேஜரை கேட்டேன். அவர் இது தமிழ் படத்துக்குதான் என்று கூறி, டைரக்டர் ரத்னகுமாரை அறிமுகம் செய்தார். அப்போது நான் டெல்லியில் இருந்தேன். டெல்லி வந்த ரத்னகுமாரும் நானும் படம் குறித்து பேசினோம். முதலில் நீண்ட முடி, தாடி என்று இருந்த ரத்னாவின் தோற்றத்தைப் பார்த்து நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன். பேசப் பேச நம்பிக்கை பிறந்தது. நாங்கள் சந்தித்த அடுத்த நாள் அவருக்குக் குழந்தை பிறந்தது. இப்படி நல்ல விஷயங்கள் நடந்தன. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ADVERTISEMENT


கேமராமேன் யாரென கேட்டபோது, விஜய் கார்த்திக் என்று சொன்னார். நான் கொஞ்சம் தயங்கினேன். எனக்குத் தெரிந்தவர்களை பரிந்துரைத்தேன். 'ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணி பாருங்க' என்று ரத்னா சொன்னார். டெஸ்ட் ஷூட்டில் நான் வழக்கமாக கொடுக்கும் போஸ்களை கொடுத்தேன். ஆனால் விஜய் சொன்னார், "உங்க கண் அழகா இருக்கு என்பதால் நீங்க கண்ணை பெருசா வைக்கறீங்க, அது வேண்டாம். நீங்க உங்க முகத்தின் ஒரு பக்கத்தைத்தான் பெரும்பாலும் காட்டுறீங்க, அதுவும் வேண்டாம். நீங்க நீங்களா இருங்க" என்று. அதன் பின் புகைப்படங்களை, படத்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மிகவும் பிடித்தது. முதல் நாள் படப்பிடிப்பு. காலையில் தூங்கி எழுவதைப் போன்ற காட்சி. நான் எப்போதும் போல நடித்தேன். ரத்னா கேட்டார், "உங்களுக்கு என்ன ஆச்சு? நீங்க நீங்களா இல்ல. உங்களுக்கு இயற்கையாவே ஒரு ஸ்டைல் இருக்கு. அதுதான் இந்த காமினி கேரக்டர். அதை பண்ணுங்க" என்று. பின்னர் எல்லாம் சுலபமானது".

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT