ADVERTISEMENT

விஜய்க்கு 'அரபிக் குத்து' ; அஜித்துக்கு...? - வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி

05:50 PM Nov 23, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் தன் டப்பிங் பணியை முடித்துள்ளார். இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப் பாடியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அஜித்தை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் பாடலுக்கு வரிகளும் எழுதி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் 'அரபிக் குத்து’ பாடலை எழுதினார். அந்த சமயத்தில் விஜய்யை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார் சிவகார்த்திகேயன். அந்தப் புகைப்படம் அப்போது ட்ரெண்டானது. அதே போல் இப்போது ட்ரெண்டாகி வரும் இப்புகைப்படத்தைப் பகிர்ந்து, அஜித்தை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் 'துணிவு' படத்தில் எதாவது ஒரு பாடல் எழுதியிருப்பாரோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT