thunivu shooting spot image released by samuthirakani

Advertisment

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கனவே அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலைப் பாடியுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது மஞ்சு வாரியரும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "துணிவு... பரபரப்பாக" எனக் குறிப்பிட்டு இயக்குநர் எச்.வினோத்துடனும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுடனும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்க்கையில் சமுத்திரக்கனி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளது போலவும் பரபரப்பாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல் ஆகியவற்றை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கஅனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.