ADVERTISEMENT

அதிர்ச்சி அளித்த அஜித்...!!!

04:44 PM Sep 02, 2019 | santhosh

'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் அஜித், ஹெச், வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அஜித்தின் 60வது படத்தையும் ஹெ.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் பூஜையுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் போலீசாக நடிப்பதாகவும், இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வைரலாகி வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT