விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித், ஹெச், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்னும் ஹிந்தி பட தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார். வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.

Advertisment

thala 60

இதனையடுத்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெ.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க இருக்கிறதாம்.

இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.