ADVERTISEMENT

மலையாள நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ; டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு

05:34 PM May 04, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'காக்கா முட்டை' படத்தின் மூலம் பலரின் கவனத்தை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் 'டிரைவர் ஜமுனா', 'மோகன்தாஸ்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து மலையாளத்தில் வெற்றிபெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லிஜின் ஜோஷ் இயக்கத்தில் அனிஷ் தாமஸ் தயாரிக்கும் மலையாள படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஊர்வசி, பார்வதி, ரம்யா நம்பீசன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி 'ஹெர்' என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT