கனா படத்தின் வெற்றியை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு கனா ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Advertisment

aishwarya rajesh

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் வதந்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரவிவந்தது.

இந்த வதந்தி தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டரில், “மக்களே, நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளைப் பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதைச் சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.