ADVERTISEMENT

மருத்துவரால் நடிகைக்கு நேர்ந்த துயரம்!

06:10 PM Jun 20, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னட நடிகை சுவாதிக்கு பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 20 நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்த நடிகை சுவாதி ஹென்னூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அடுத்த சில தினங்களில் சுவாதியின் முகம் வீங்கி, கடுமையான பல் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை சுவாதி மீண்டும் அந்த மருத்துவமனைக்கு தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவர் ஒரு சில தினங்களில் வீக்கம் தானாக குறைந்து விடும் எனக் கூறியுள்ளார். ஆனால் நடிகை சுவாதிக்கு கடுமையான பல் வலி ஏற்பட்டதுடன், ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது முகம் வாங்கியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தவறாகச் சிகிச்சை அளித்து எனது முகத்தைச் சீரழித்து விட்டதாக கூறி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தவறான சிகிச்சையால் என்னுடைய தொழில் வாய்ப்பை இழந்து விட்டேன். இது குறித்து விளக்கம் கேட்டால், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது. இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT