kannada actress megha shetty about tamil cinema

தமிழ் சினிமாவில் புதுவரவாக நடிகை மேகா ஷெட்டி இணைந்துள்ளார்.கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷெட்டி, சினிமா மீதான ஆர்வத்தில் தொலைக்காட்சி சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். மேலும் ஒரு தொலைக்காட்சி சீரிஸையும் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

Advertisment

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் அவர் நடித்துள்ளார். மேகா ஷெட்டிக்குப் பிடித்த ஜானர் மற்றும் அவர் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் பற்றி கேட்டபோது, ​​"எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்புகிறேன். தமிழ் படங்கள் கதாநாயகிகளுக்கு அப்படியான கதாபாத்திரங்களை கொடுத்து வருகிறது. நானும் அதைப்போன்ற கதாபாத்திரங்களை ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துள்ளேன். நடிப்பு தவிர, திரைப்படங்களைத் தயாரிக்கவும், எதிர்காலத்தில் திரைப்பட ஆர்வலர்களுக்கு தரமான கதைகளை கொடுக்கவும் விரும்புகிறேன். இது எனது குடும்பத் தொழில். தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்" என்றார்.

Advertisment