ADVERTISEMENT

‘ காதல் வந்தால் இதயத்தை மென்மை ஆக்கும், ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால்’- மாணவர்கள் கத்தி குத்து குறித்து விவேக்

03:18 PM Jul 24, 2019 | santhoshkumar

பெரம்பூர் - திருவேற்காடு இடையே இயக்கப்படும் மாநகர பேருந்தில் பயணம் செய்யும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதன் காரணமாக நேற்று அரும்பாக்கம் அருகே சென்ற 29 E வழித்தடம் கொண்ட பேருந்தில் மீண்டும் இரு குழுக்களுக்கு இடையே பிரச்சனை முட்டிக்கொள்ள. அப்போது மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதனால், பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் ஓடிய மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டாகத்தியால் தாக்கி கொண்டனர்.

இதில், பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் படுகாயமடைந்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவர்கள் பட்டா கத்தியுடன் சண்டையிட்டுக் கொண்டதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

இந்த விவகாரம் பல தரப்பில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பலர் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் இதுகுறித்து ட்விட்டரில், “மாணவர்கள் கையில் பட்டாகத்தி. கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும். இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும்; கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும்.ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT