Published on 17/04/2021 | Edited on 17/04/2021

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் எஸ்.ஜே.சூர்யா டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மாபெரும் கலைஞனே, மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு... என்ன நடக்கின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
