ADVERTISEMENT

பா.ரஞ்சித்திற்காக 8 வருடங்கள் காத்திருந்த விக்ரம்?

10:36 AM Feb 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'மகான்' படத்தில் நடித்திருந்தார். கடந்த 10 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதனிடையே நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா', மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை 'மெட்ராஸ்' படத்தை இயக்கும் போதே இயக்குநர் பா.ரஞ்சித் விக்ரமிடம் கூறிவிட்டதாகவும், அதற்கு அவரும் ஓகே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் 'மெட்ராஸ்' படத்தை தொடர்ந்து 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' ஆகிய படங்களை இயக்கியதால் விக்ரம் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்தி வரும் ப.ரஞ்சித் அடுத்ததாக 'சியான் 61' படத்தின் பணியில் ஈடுபடவுள்ளார். மேலும் இப்படத்திற்காக நடிகர் விக்ரம் 8 வருடங்களாக காத்திருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT